செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஒருவேளை அன்னதான திட்டத்தின் படி 754 திருக்கோயில்களில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கூடுதலாக 10 திருக் கோயில்களிலும்…. இந்த ஆண்டு மானிய கோரிக்கைகள் கூடுதலாக 7 திருக்கோயில்கள் என்று இணைக்கப்பட்டு,  ஆண்டிற்கு 25 கோடி ரூபாய் அளவிற்கு ஒருவேளை அன்னதான திட்டத்திற்கு இந்து சமய அறநிலைத் துறையின் திருக் கோவிலின் சார்பில் செலவிடப்படுகின்றது.

ஒன்றிய அரசால் வழங்கப்படுகின்ற போக் என்ற சான்றிதழ் இந்து சமய அறநிலை துறையின் சார்பில் அன்னதானங்கள் நடைபெறுகின்ற திருக்கோயில்களில் இதுவரையில் 524 திருக்கோயில்களில் போக் சான்றிதழ் தமிழ்நாட்டின் சார்பில் பெறப்பட்டிருக்கின்றது. இது இந்தியாவிலேயே அதிகமான அளவிற்கு தரச் சான்றிதழ் பெற்ற மாநிலம் தமிழகம் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதோடு மட்டுமல்லாமல் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடத்தப்படுகின்ற அன்னதானங்களில் அன்னதானம் தரத்தை பரிசோதிப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு,  ஆண்டிற்கு 4 முறை ஒவ்வொரு அன்னதான கூடத்தையும் பரிசோதித்து….  அதற்கு உண்டான தரச் சான்றிதழை வழங்குவதோடு,  அந்த அன்னதான கூட்டங்களில் இருக்கின்ற குறைகளையும்,  அறிக்கையாக தந்து….

அந்த அன்னதான கூடத்தையும்  சரி செய்து….  உணவின் தரத்தையும் பரிசோதித்து பக்தர்களுக்கு சிறந்த முறையில் அன்னதானம் வழங்குகின்ற ஒரு மாநிலம் உண்டென்றால்,  இந்தியாவிலேயே அது தமிழகம் தான் முதல் நிலையிலேயே இருக்கின்றது. என்பதையும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம்.

வருகின்ற காலகட்டங்களில் இன்னும் அதிகமான திருக்கோயில்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் நிறைவேற்றி, இது போன்ற புதிய புதிய திட்டங்களால் பக்தர்களுடைய மன நிறைவை பெறுகின்ற ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி விளங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.