
பாரதிய ஜனதா கட்சி சோசியல் மீடியாவை தவறாக பயன்படுத்துகிறது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களை சரியான பாதைக்கு கொண்டு போகாமல் வெறும் அவதுறை பரப்புவது பிஜேபி வேலையா இருக்கிறது என தெரிவித்துள்ளார். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
இன்னைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சமூக வலைதளம் இருப்பதே பொய்யை பேசுவதற்கு தான். பொய் செய்தியை போடுவதற்கு தான். முதலில் டிஆர்பி ராஜா போட்டுக்கிட்டு இருந்தார். அவர் அமைச்சர் ஆன பிறகு அந்த பதவி வேற ஒருத்தருக்கு கொடுத்துட்டாங்க. பொய்யை பேசுவதற்கு அவர்கள் பயன்படுத்துவது சமூக வலைதளம். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இளைஞர்களுடைய எண்ணத்தை சமூகவலை தளத்தில் வெளிப்படுத்துறாங்க.
திமுகவில் எந்த இளைஞர்களும் இல்லை அவுங்க எப்படி வெளிப்படுத்துவாங்க. பாரதிய ஜனதா கட்சியினுடைய சமூக வலைதளம் தான் உலகிலேயே அதிகமான பாலோவர்ஸ் கொண்டுள்ளது. சோசியல் மீடியால உலகிலேயே அதிகமான பாலோவர்ஸ் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இருக்கு. இந்தியாவுல டாப் அக்கவுண்ட் எடுத்து பாத்தீங்கன்னா.. பிஜேபி அக்கவுண்ட்ஸா தான் அதிகமா இருக்கும். காரணம் இளைஞர்களுடைய மென்டாலிட்டியை எதிரொலிக்கின்ற சோசியல் மீடியா அக்கவுண்ட் பாஜக கிட்ட இருக்கு என தெரிவித்தார்.