சமத்துவம், சமூக நீதி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கு முற்றிலும் எதிரான ‘கொத்தடிமை’ என்ற வார்த்தையை தற்கால அரசியல் சூழலில் மிக எளிதாக நார்மலைஸ் (Normalize) செய்து வருவது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல் மேடை ஒன்றில் தம்பி ஒருவர், எந்தச் சூழலில் பேசினாலும் “இது கொத்தடிமைக்கூட்டம்” என்று குறிப்பிட்டதைக் கேட்டு அங்கிருந்த கூட்டம் எப்படி கைகொட்டி, விசிலடித்துக் கொண்டாடியது என்பது புரியவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

“இது கொத்தடிமைக்கூட்டம்தான், We Are Proud கொத்தூஸ்” என்று பேசும்போது, சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து அமைதியாகியிருக்க வேண்டுமே தவிர, அதை ஆர்ப்பரித்துக் கொண்டாடியது அநாகரிகத்தின் உச்சம் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. ​இந்த ஒட்டுமொத்தக் கூத்தையும், கொண்டாட்டத்தையும் பார்க்கும்போது அறிவாலயத்தில் இன்பநிதியைத் தலைமையேற்க வைப்பதற்கான ஒரு பெரும் சேனை தயாராகிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, ‘கொத்தடிமை’ என்ற சொல்லாடலையே தங்களின் பெருமையாக நினைத்து விசிலடிக்கும் இத்தகைய கூட்டத்திற்கு “வாழ்த்துகள் கொத்தூஸ்!” என இணையத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட காரசாரமான விமர்சனம் தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி, விவாதத்தை அனல் பறக்க விட்டுள்ளது.