திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,  திமுகவின் உடைய உணர்ச்சிமிக்க தோழர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு 1957லே கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாம்பு காலை சுற்றுகிறது, பரவாயில்லை… என் தலைன் ஆணை தான் எனக்கு பெரியது என்று சொல்லுகின்ற ஆற்றல்… அந்த பரம்பரை. அந்த பரம்பரையில் வந்தவர்கள் தான் நீங்கள் எல்லாம்… இன்றைக்கு உட்கார்ந்து இருக்கிறீர்கள்.

உங்கள் பாட்டன்,  உங்கள் அப்பன்,  உங்கள் சித்தப்பன், பெரியப்பன், மாமன், மச்சான், இவன் எல்லாம் இந்த தியாகத்திலே நின்றவர்கள் தான். எனவே தான் இன்றைக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இப்படை தோற்பின் எப்படி ஜெயிப்போம் என்று சொல்வார் அண்ணா.

நான் கேட்கின்றேன் இதோ என் முன்னால் இருக்கின்ற இந்த முகங்களை பார்க்கிறேன். வீரம் சொட்டுகிறது,  விவேகம் தெரிகிறது….  கண்களிலே மிரட்சி வருகிறது. எங்கே மழை  ? எங்கே மழை?  என்று கேட்ட குரல் கேட்கிறது. இவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க இந்த சிங்கங்களை தாண்டியா சிறுத்தை, சிறு எறும்புகள் ஓடி வந்து விடும்.  அதைத்தான் எந்த தலைவனும் வகுக்காத ஒரு வியூகத்தை நம்முடைய தலைவர் தளபதி வகுத்திருக்கிறார்.

சினிமாவில் பார்ப்பீர்கள். ஒரு நாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் போர் என்கிறால்?  இந்தப் பக்கம்  500, 1000 பேர் இருப்பார்கள். அந்த பக்கம் ஆயிரம் பேர் இருப்பார்கள். சண்டை வரும்… இவன் போவான்,  அவன் போவான்.  எவனை எவன் அடித்தான் என்று தெரியாது. ஆனால் தளபதி இந்த வேலை என்கிட்ட வேண்டாம். இந்த பக்கம் நீ நில்.  அந்தப் பக்கம் அவன் இருக்கட்டும். இதோ பார்…

அதோ போட்டு இருக்கானே….  அவன் மட்டும்தான் உன் எதிரி. அவன் கையிலே நூறு ஓட்டு இருக்கிறது.  அதை மட்டும் பறித்து விட்டால் நீ ஜெயித்து விட்டாய் என்று ஆளைக் காட்டி,  100 வாக்குகளை பிடுங்கிக் கொண்டு வா என்று ஒவ்வொருத்தருக்கும் ஒரு 100, 100 பேரை காட்டுகின்றார்.

100 பேரை வெல்லாத கூட்டமா ? நம்முடைய கூட்டம். இன்றைக்கு ஆயிரம் பேரை வெற்றி பெற்ற கூட்டம். ஆகையால் இந்த வியூகம் தனிப்பட்ட  வியூகம். இந்த வியூகத்தை இன்றைக்கு நம்முடைய தலைவர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக நான் வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்தார்.