டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள இந்த ஒற்றை அறிக்கை, உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. ஈரானின் தலைமைப்பண்பு சீர்குலைந்துள்ளதாகவும், நிலைமையைச் சரிசெய்ய அவர்கள் போராடி வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ திறக்குமாறு அந்நாடே அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக டிரம்ப் கூறியிருப்பது தான். ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முடக்க நினைக்கும் வேளையில், ஈரானே வந்து ஜலசந்தியைத் திறக்கச் சொல்வது முரணாகப் பார்க்கப்பட்டாலும், டிரம்ப் இதனைத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஒருபுறம் டிரம்ப் இப்படிச் சொல்ல, மறுபுறம் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்யா விரைந்து அதிபர் புதினைச் சந்தித்துப் பேசியுள்ளார். ரஷ்யா தங்களுக்கு முழு ஆதரவு தரும் என புதின் உறுதியளித்துள்ள நிலையில், ஈரானின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அமெரிக்காவிற்குள் வான்ஸ் மற்றும் ஹெம்செத் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், டிரம்பின் இந்த அதிரடிப் பதிவு உலக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
