கன்னியாகுமரியில் சென்ற வருடம் செப்,.7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத யாத்திரை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பல மாநிலங்களை கடந்த ராகுலின் பாத யாத்திரை இப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்து உள்ளது. இதற்கிடையில் யாத்திரையின் போது ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் தன் திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்துள்ளார். அதாவது, சரியான பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்துக் கொள்வேன். என் பாட்டியார் இந்திரா தான் என்னுடைய வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் அதுபோல் ஒரு பெண்ணை தேர்வுசெய்வேன். தான் விரும்பக்கூடிய என் அம்மா மற்றும் தனது பாட்டியின் குணநலன்கள் கலந்திருந்தால் நல்லது என ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.