இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வாட்ஸ்அப் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது.

SBI வாட்ஸ்அப் சேவையை பெறுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம்.

SBI வாட்ஸ்அப் வங்கி சேவையை பயன்படுத்த வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணில் இருந்து WAREG என பதிவிட்டு பின், எஸ்பிஐ வங்கி கணக்கு எண்ணையும் உள்ளிட்டு  917208933148 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். பதிவு முடிந்தவுடன் நீங்கள் SBIன் WhatsApp சேவையை பயன்படுத்த முடியும். அப்படி இல்லையென்றால் வாட்ஸ்அப்-ல் 909022690226 என்ற எண்ணுக்கு Hii என அனுப்பினால் பிறகு, செயற்கை நுண்ணறிவின் வாயிலாக இயங்கும் Chatbot  செயல்பட துவங்கும். அதன் வழிமுறைகளை கடைப்பிடித்து பதிவுசெய்தால் வங்கிச் சேவைகளை வாட்ஸ்அப் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.

9 இலவச சேவைகள்

இனிமேல் SBI வங்கி வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் வாயிலாக கீழ்காணும் வசதிகளை இலவசம் ஆக பெறலாம். கணக்கின் இருப்பு நிலவரம் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளுக்கு உரிய மினி அறிக்கையினை வாட்ஸ்அப்-ல் பெறலாம். ஓய்வூதிய தகவல்கள், வைப்புநிதி குறித்த தகவல், சேமிப்புக்கணக்கு, தொடர் வைப்பு, கால வைப்பு போன்றவற்றின் தகவல்கள் மற்றும் வட்டி விகிதங்கள் இதன் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.

வீட்டுக்கடன், கார் கடன், தங்கக்கடன், தனி நபர் கடன், கல்விக்கடன் போன்றவற்றின் முழு தகவல்கள் மற்றும் வட்டி விகிதங்கள் பற்றியும் செய்திகள் கிடைக்கும். வெளிநாடுவாழ் இந்தியர்களின் NRE கணக்கு, NRO கணக்கு மற்றும் அதற்குரிய வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்களும் இனி நொடிப் பொழுதில் கிடைக்கும்.  உடனே புது வங்கி அக்கவுண்ட் ஓப்பன் செய்வதற்கான அம்சங்கள், தகுதி, தேவைகள் மற்றும் இதுகுறித்த கேள்விகளுக்கான பதில்களும் வாட்ஸ் அப் செய்திகளாக கிடைக்கும்.

வங்கி வாடிக்கையாளர் சேவைமையத்தின் தொடர்பு எண்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கான உதவி எண்களை இதன் வாயிலாக பெறலாம். தனிநபர் கடன், கார்கடன், இருசக்கர வாகனக் கடன் குறித்த தகவல்களும் அனுப்பப்படும். அக்கவுண்ட் பேலன்ஸ்,  வாட்ஸ்அப் பேங்கிங் பதிவுகள் போன்ற வசதிகள் இங்கு கிடைக்கும். அதோடு பரிவர்த்தனை குறித்த சுருக்கமான தகவல்களும் வாட்சப் வாயிலாக பெறலாம்.