புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 71 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவு டெங்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி நகர பகுதி முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படுகின்றது.

குறிப்பாக மேட்டுப்பாளையம், ரெட்டியார் பாளையம் உள்ளிட்ட பல நகர பகுதிகளில் டெங்கு காய்ச்சலானது அதிகரித்து பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் 30 சுகாதார மையம் புதுச்சேரியில் இயங்கி வருகின்றது. அதில் கடந்த 20-ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.