பால் ஜீவன் பீமா யோஜனா என்பது ஒரு அஞ்சல் அலுவலக திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தினசரி 6 ரூபாயை முதலீடு செய்வதால் குழந்தையின் எதிர்காலத்தினை மேம்படுத்தலாம். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக உங்கள் குழந்தையின் கல்விச் செலவுகளுக்காக முன்கூட்டியே பணத்தை சேமித்து வைக்கலாம். அஞ்சல் நிலையத்தில் குழந்தைகளுக்குரிய பால் ஜீவன் பீமா யோஜனாவை கொண்டு வந்திருக்கிறது.

குழந்தையின் பெற்றோர் மட்டும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். இத்திட்டத்தை பெற சில நிபந்தனைகளும் இருக்கிறது. உதாரணமாக திட்டத்தை பெற விரும்பும் பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 45 வயதுக்கு அதிகமான பெற்றோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இயலாது. 5-20 வயது வரையுள்ள குழந்தைகள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் கீழ் பெற்றோர்கள் தங்கள் 2 குழந்தைகளுக்கு மட்டுமே பாலிசி வாங்கமுடியும்.

அதன்படி, பெற்றோர்கள் தங்கள் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் உங்கள் குழந்தைக்கு நாளொன்றுக்கு ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் டெபாசிட் செய்யலாம். 5 வருடங்களுக்கு இந்த பாலிசியில் தினசரி ரூ.6 பிரீமியமாக டெபாசிட் செய்யவேண்டும். அதோடு 20 வருடங்களுக்கு ரூ.18 பிரீமியம் செலுத்த வேண்டும். பாலிசி முதிர்ச்சியடைந்ததும் நீங்கள் ரூ.1 லட்சத்தை மொத்தமாக பெறுவீர்கள்.