தமிழகத்தில் மோசடி கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கி பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் விருதுநகரில் நடைபெற்றுள்ளது.

அதாவது விருதுநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்மந்தப்பட்ட நகைக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விருதுநகர் கச்சேரி ரோட்டில் செயல்பட்ட அரூஷா தங்க நகை கடையில் ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நிர்வாகி முத்துமாரி மற்றும் நகைக்கடை உரிமம் பெற்ற பவன்ராஜ் ஆகியோரின் காவல்துறையினர் கைது செய்தனர்.