தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று(ஜன,.16)  காலை 11 மணிக்கு ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இது குறித்து ஆலோசிக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் சார்பாக தம்பிதுரை, சந்திரசேகர், ஓபிஎஸ் சார்பில் சுப்புரத்தினம், பிரகாஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதன்பின் பாஜகவின் முக்கிய தலைவர்களை இருதரப்பும் சந்திக்க உள்ளனர். விரைவில் தேர்தல் வர உள்ளதால் அணிகள் இணைப்பு குறித்து பேசப்படும் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.