தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். சுமார் 4 வருடங்கள் ஆன நிலையில் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை பைகரா பகுதியில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் எய்ம்ஸ் கட்டும் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற சிறுவனுக்கு  எம்பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்தார். மேலும் எம்பி கூறியதாவது, தமிழகத்தை புறக்கணிக்கும் விஷயத்தை விளையாட்டாக மாற்றியதற்கு வாழ்த்துக்கள். அதோடு வெற்றி பெற்றவர்களுக்கு என் பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.