அட உங்களுக்கு இது தெரியுமா கிரிக்கெட் கிங்காக இருக்கும் விராட் கோலி இந்தப் பொருளை சாப்பிடவே மாட்டாங்களாம். கிங் கோலி’ என ரசிகர்கள் அழைக்கும் விராட் கோலி தனது உணவு மற்றும் உடற்பயிற்சியில் கடுமையான திட்டத்தை பின்பற்றுகிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை. இந்த ஆண்டு 36 வயது முடித்த விராட் கோலி ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடன் இருக்கிறார். பல பேட்டிகளில் தனது உணவு நேரம், உடற்பயிற்சி திட்டம் குறித்து விவரித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது உணவுத் திட்டத்தை பற்றி அவர் கூறியுள்ளார் அதில் அவர் மசாலா சேர்த்த பொருள்கள் மற்றும் குழம்புகளை அவர் சாப்பிட மாட்டார் என அவர் கூறியுள்ளார். அவர் தனது உணவில் 90 சதவீதம் வேகவைத்த உணவுகளை மட்டும் சாப்பிடுவார் எனவும் சுத்தமான உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சப்பழம் அவர் உணவில் சேர்த்துக் கொள்ளவார் என கூறினார். அவர் பஞ்சாபி என்பதால் ராஜ்மா மற்றும் லோபியா (கருப்பு கண் மணி பயிறு) சாப்பிடுவதை தவிர்க்க முடியாது எனபதால் அதை கண்டிப்பாக சாப்பிடுவேன் என அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் மசாலா உணவில் சேர்க்காததால் அதற்கு பதிலாக மிளகை சேர்த்துக் கொள்வார் என அவர் கூறியுள்ளார். விராட் கோலி போல உணவை பின்பற்றுவது எளிது ஆனால் அவரைப்போல உடற்பயிற்சியில் செலுத்தும் அர்ப்பணிப்பை பின்பற்றுவது தான் கடினம்.
மேலும் நல்ல உணவுப் பழக்கங்கள் தேவையான உடற்பயிற்சி செய்வதால் விராட் கோலி போல உடலமைப்பை பெற முடியும்.