இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக எழுந்துள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு காணொலியில், தோனி தனது மனைவி சாக்ஷியுடன் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, பாதுகாப்பு சோதனையின் போது தனது கைக்கடிகாரம் மற்றும் உடற்பயிற்சி பட்டையை அகற்றாமல் அப்படியே சென்றது பதிவாகியுள்ளது.
Why have security protocols at all for VIPs at the airport when you are doing it for the sake of it @CISFHQrs ? @AAI_Official ?
Dhoni is wearing a watch in one hand and a fitness device in the other. An ordinary citizen will be returned back to put them in the trays and rejoin… pic.twitter.com/ZySGaIvte9
— With Love India (@WithLoveIndiaa) December 18, 2025
பொதுவாக சாதாரண பயணிகள் தங்களது காலணிகள், கடிகாரங்கள் மற்றும் பெல்ட் போன்றவற்றை அகற்றிவிட்டுத் தான் சோதனைக்குச் செல்ல வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில், தோனிக்கு மட்டும் அத்தகைய விதிகள் பின்பற்றப்படாதது ஏன் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரபலங்களுக்கு ஒரு விதி, சாமானியர்களுக்கு ஒரு விதியா என ‘விஐபி’ கலாச்சாரத்திற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தோனி இந்திய ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருப்பவர் என்பதால் அவருக்கு இத்தகைய விலக்கு அளிக்கப்படலாம் என்று ஒரு தரப்பினர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
