புத்தாண்டை ஒட்டி நேற்று பல்வேறு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையை செய்திருந்தது. குறிப்பாக நேற்று 368 இடங்களில் வாகன சோதனைகளை செய்தார்கள். சென்னையில் மட்டும் 16,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில நேற்று புத்தாண்டு கொண்டாடும்போது ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் குடித்துவிட்டு வாகன ஓட்டியதாக 252 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 24 பேர் மீது அதி வேகமாக  வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

22 பேர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்த 65 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.சென்னை வளசர்ப்பக்கத்தில் இருசக்க வாகனத்தில் சென்று இளைஞர் ஒருவர் சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதி உயிரிழந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 276 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.