தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் நீட் விலக்கு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். நேற்று மதியம் ஒன்றை மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சரான கிரிராஜ் சிங்கை அமைச்சர் உதயநிதி டெல்லியில் உள்ள ரிஷி பவனில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின்போது டெல்லி சிறப்பு பிரதிநிதி கே எஸ் விஜயன், தி.மு.க எம்.பி கௌதம் சிகாமணி, ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் மேம்பாடு, திறன் மேம்பாடு, மகளிர் சுய உதவி குழுக்கள், மேம்பாட்டு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் சிலைகளுக்கு முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

அதன் பின் மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, நீட் தேர்வு விலக்கு, விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக கோரிக்கைகளை முன் வைத்தோம். அது தொடர்பாக அவர் சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அதனை கேட்டு நீட் விலக்கு தான் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு அதற்கான சட்ட போராட்டத்தை தொடருவோம் என கூறியுள்ளார்.