டைரக்டர் சரண் இயக்கத்தில் சென்ற 2002ம் வருடம் வெளியாகிய படம் “ஜெமினி”. விக்ரம் நாயகனாக நடித்து இருந்த இத்திரைப்படத்தில் கிரண் ஹீரோயினியாக நடித்திருந்தார். அதோடு கலாபவன் மணி, வினு சக்ரவர்த்தி, மனோரமா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்த இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் குறிப்பாக “ஓ போடு” பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. இந்நிலையில் ஜெமினி படம் வெளியாகி 21 வருடங்களானதை நடிகர் விக்ரம் தன் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.