சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் “பிச்சைக்காரன்”. சென்ற 2016 ஆம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து பிச்சைக்காரன் திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார்.

அண்மையில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலாகியது. அதன்பின் இப்படத்தின் அடுத்த பாடலான “கோவில் சிலையை” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் -தங்கைக்கு இடையில் உள்ள பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.