புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரது இயக்கத்தில் இப்போது உருவாகியிருக்கும் படம் “மைக்கேல்”. இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்து உள்ளனர். அதோடு கவுதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி திவ்யன்ஷா கவுசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். மைக்கேல் படம் வருகிற பிப்,.3 ஆம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் ஆகவுள்ளது. அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.