விக்னேஷ் சிவன் டைரக்டில் தல அஜித் நடிப்பதாக இருந்த திரைப்படம் “ஏகே 62”. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்தில் இருந்து திடீரென்று இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இந்த படத்தில் இயக்குனராக கமிட்டாகி இருக்கிறார் என கூறப்பட்டது. எனினும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் மகிழ் திருமேனி டைரக்டில் அஜித் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என தெரிவிக்கின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூபாய்.220 கோடி ஆகும். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறுகின்றனர். விரைவில் ஏகே-62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 62ல் இருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே-63 படத்தை டைரக்டு செய்வார் என கூறப்படுகிறது.