தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் பிரபலங்களின் அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, மேத்திவ் தாமஸ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். இதற்கிடையில் தளபதி 67ல் விஜய்யுடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்கிறார் என்பது போல் தகவல் வெளிவந்தது.

ஆனால் கமல் தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை. இத்திரைப்படத்தில் நடிப்பதன் வாயிலாக தளபதியின் கால்ஷீட்டை தனது ராஜ் கமல் நிறுவனத்திற்காக வாங்கலாம் என திட்டமிட்டு கணக்கு போட்டு வைத்திருந்தாராம் கமல். இருப்பினும் விஜய் அதற்கு செவி சாய்க்காத காரணத்தினால் தளபதி 67-ல் நடிக்கும் முடிவை கமல் மாற்றிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.