தளபதி விஜய் நடித்த “வாரிசு”, அஜித் நடித்த “துணிவு” ஆகிய 2 திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற பேச்சுதான் முதல் நாளிலிருந்து பேசப்பட்டு வருகிறது. இந்த 2 படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மலேஷியாவில் எந்த படம் இதுவரையிலும் அதிகமான வசூல் செய்திருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் துணிவு திரைப்படம் இதுவரை ரூ. 16 கோடி வரை வசூல் செய்து உள்ளது. ஆனால் வாரிசு திரைப்படம் ரூபாய்.18 கோடி வசூல் செய்து சற்று முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.