பிரபல தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளரான நாக வம்சி தயாரிக்கும் இந்த படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் “சார்” எனவும் தமிழில் “வாத்தி” எனவும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வாத்தி படம் வரும் பிப்,.17 ஆம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.