வோடாபோன் தனது பயனர்களுக்கு புதிய இரண்டு ரீசார்ஜ் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது அவை சூப்பர் ஹவர் 24 ரூபாய் மற்றும் சூப்பர் டே 40 ரூபாய். இதில் சூப்பர் ஹவர்  ரிச்சார்ஜ் மூலம் ஒரு மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டாவை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று சூப்பர் டே ரீசார்ஜ் மூலம் ஒரு நாள் முழுவதும் 6gb டேட்டாவை பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தங்களின் வழக்கமான ரீசார்ஜில் அன்றாட டேட்டா முடிந்த பிறகு இந்த ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்த நீங்கள் வழக்கமாக  செய்யும் ரீசார்ஜ் செய்யப்பட்டு வேலிடிட்டி இருக்க வேண்டும். இந்த திட்டம் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு உதவும்.