ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பலருக்கும் ட்விட்டர் மீது அதிருப்தி ஏற்பட்டு இருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் போன்று இன்ஸ்டாகிராம் மூலமாக திரட்ஸ் எனும் செயலில் வர இருப்பதாக தகவல் வெளியானது.

இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்த திரட்ஸ் செயலி ட்விட்டரை போன்றே இருப்பதாக பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு twitter-ல் தனது கடைசி பதிவை வெளியிட்ட Mark Zuckerberg 11 வருடம் கழித்து இன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு ஸ்பைடர் மேன்கள் ஒன்று போல் இருக்கிறார்கள். இது ட்விட்டரையும் திரட்ஸ்ஸயும் குறிக்கும் வகையில் உள்ளது.