ட்விட்டரில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்டா நிறுவனம் Threads என்ற புதிய செயலியை இன்று ஜூலை 6-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன்மூலமாக மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரொஃபைலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. த்ரெட்ஸ் செயலி 7 மணி நேரத்தில் 1 மில்லியன் பயனர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், த்ரெட்ஸ் செயலியில் பயனர்கள் ஒவ்வொரு பதிவுக்கும் 500 வார்த்தைகள் வரை பயன்படுத்த முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு பதிவுக்கு 10 போட்டோ, 5 நிமிட காணொளி பதிவிட முடியும். தங்கள் பதிவுக்கு யார் பதில் அளிக்கலாம் என்பதை பயனர்கள் கட்டுப்படுத்தலாம் என மெட்டா நிறுவனம் தகவல் வெளியாகியுள்ளது.