டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் Threads சமூக வலைதளம் நேற்று  இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அறிமுகமானது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராமை அடிப்படையாக கொண்டு புதிய செயலியை உருவாக்கி யுள்ளது. ‘பிராஜெக்ட்92’ என பெயரிட்டப்பட்டுள்ள இந்த செயலி ஆக்டிவிட்டிபப் உடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரொஃபைலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்த த்ரெட்ஸ் செயலி 7 மணி நேரத்தில் 1 மில்லியன் பயனர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் சேட்ஜிபிடி 5 நாட்களில் 1 மில்லியன் பயனர்களை கடந்திருந்த நிலையில், அந்த சாதனையை த்ரெட்ஸ் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் 2.5 மாதங்கள், ஸ்பாட்டிஃபை 5 மாதங்கள், ஃபேஸ்புக் 10 மாதங்களில் 1 மில்லியன் பயனர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.