Whatsapp தொடர்ந்து பல்வேறு அம்சங்களை தன்னுடைய பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக அப்டேட் வெளியிட்டு வருகிறது. உலக அளவில் பெரும்பாலான மக்கள் இந்த whatsapp செயலியில் தான் ஒருவருக்கொருவர் தகவலை பரிமாற்றிக் கொள்ள பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சமூக நிர்வாகிகளுக்கு குழுக்களை பரிந்துரைக்கும் அம்சமானது வெளியாகியுள்ளது.

இந்த அம்சம் சோதனை முயற்சியாக ஆண்ட்ராய்டு பீட்டா பயனாளர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் இதில் பரிந்துரை செய்யும் குழுக்களை அனுமதிக்கவும் நிராகரிப்பதற்கும் வசதிகள் இருக்கிறது. பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் குழு தானாகவே சமூகத்தில் சேர்க்கப்படும். அதன் உறுப்பினர்களும் சேர்க்கப்படுவார்கள். வேண்டாம் என்றால் சம்பந்தப்பட்ட சமூகத்தில் இருந்து தனியாக வெளியேறி கொள்ளலாம்.