டிவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் Threads சமூக வலைதளம் வரும் 6-ம் தேதி தேதி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அமெரிக்காவிலும், 7-ம் வெளியாகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராமை அடிப்படையாக கொண்டு புதிய செயலியை உருவாக்கி வருகிறது. ‘பிராஜெக்ட்92’ என பெயரிட்டப்பட்டுள்ள இந்த செயலி ஆக்டிவிட்டிபப் உடன் ஒன்றிணைக்கப்பட இருக்கிறது.

இதன்மூலமாக மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் போல் இன்ஸ்டாகிராமிலும் எழுத்துக்களை போஸ்ட்டாக பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் விவரங்களை கொண்டு தானாக ப்ரொஃபைலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.