GB வாட்சப் பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் கணக்குகளை  நிரந்தரமாக வாட்சப் நிறுவனம் முடக்கி வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்றைக்கு வாழ்வின் முக்கிய அங்கமாக பலருக்கும் மாறிவிட்டது. அதிலும், வாட்ஸ் அப் உபயோகிக்காத நபர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு வாட்ஸ் அப் செயலியின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. 

 

அனைத்து விதமான பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், ப்ளே ஸ்டோரில் இருக்கும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் ஒருபுறமிருக்க,  கூடுதலான ஒரு சில வசதிகளை மேற்கொள்வதற்காக ஜிபி வாட்ஸ்அப் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத whatsapp செயலிகளை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. 

அங்கீகரிக்கப்பட்ட  whatsapp இல்  End to End Encryption  என்று சொல்லப்படும் பாதுகாப்பு அம்சம் இல்லை. அதாவது, நீங்கள் உங்களுக்கு பிடித்தமான நபருடன் பேசக்கூடிய குறுஞ்செய்தி, அவர்களுக்கு அனுப்பக்கூடிய புகைப்படம் ஆகியவை அவர்கள் மட்டும்தான் பார்க்க முடியும்  என்பதில் எந்த உத்தரவாதமும் கிடையாது, அதை மற்றவராலும் எளிதாக பார்க்க இயலும் என்பதாகும். இது போன்ற ஆபத்துகளிலிருந்து பயன்பாட்டாளர்களை பாதுகாக்க வாட்சப் நிறுவனம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், GB வாட்சப் போன்ற அங்கீகரிக்கப்படாத  செயலிகளை உபயோகிப்போர் வாட்ஸ் அப் கணக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் ஜிபி வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபராக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் உங்களது வாட்ஸ் அப் கணக்கு  முடக்கப்படும் என்பதை நினைவில் கொண்டு உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட வாட்சப் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவதே இதற்கு தீர்வாக அமைகிறது.