உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் புதிய அதிரடி மாற்றங்களை அவர் செய்து வருகிறார். அதன்படி தற்போது பயனர்கள் ஒரு நாளில் இத்தனை டுவிட்மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் பயணங்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக எலான் மஸ்க் கூறுகையில், Aiஸ்டார்ட் அப் போன்றவை மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறினார்.

தற்காலிகமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் ட்விட்டர் பயனர்கள் இத்தனை டுவிட் தான் பார்க்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதாவது வெரிஃபைடு பெற்றிருக்கும் ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6000 பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயணங்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இதில் மாற்றம் செய்து வெளியிட்டார். அதன் பிறகு இறுதியாக மூன்றாவது முறையாக எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பில், வெரிஃபைடு பெற்றிருக்கும் ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் பத்தாயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு பெறாத பயணங்கள் ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 500 பதிவுகளையும் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.