மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தன்னை விதித்தது.

இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அடுத்து அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார். இதற்கிடையில் இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்திலும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் அவர் தனியாக மனுதாக்கள்  செய்திருந்தார். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தான் நாளை தீர்ப்பானது வழங்கப்பட இருக்கின்றது. இதில் மிக முக்கியமான விஷயம் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறதா அல்லது முழுமையாக ரத்து செய்யப்படுகிறதா போன்ற விஷயங்களை எல்லாம் நாம் பொறுமையாக நாளை வரை காத்திருந்து பார்க்க வேண்டியதாக இருக்கின்றது. ஆனால் தீர்ப்பு எவ்வாறாக வந்தாலும், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மட்டும் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை.

ஏனென்றால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியானதா அல்லது தவறானதா என்பதும் இதன் வாயிலாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.  அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்கிறாரா  இல்லையா என்பதும் நம்மால் இதன் மூலமாக தெரிவித்துக் கொள்ள முடியும். தேர்தல் ஆணையம் இந்த தொகுதியில் தேர்தலை நடத்துவது உள்ளிட்ட அனைத்துக்குமான கேள்விகளுக்குமான விடை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பின் வாயிலாக நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.