தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, மதுரை மண்ணில் இருக்கக்கூடிய வேளாண் பல்கலைக்கழகம் என் கையில் இருக்குதுங்க.  என ( செங்கலை உயர்திக் காட்டினார்) ஒரு செங்கலாக இருக்கிறது. நீங்க எதுவுமே செய்ய மாட்டீங்க, செய்கிறவர்களையும்  விட மாட்டீங்க. கொடுக்கணும்னு நினைச்சவங்களையும் பாராட்ட மாட்டீங்க.

ஒரு மனுஷன் அஞ்சு வருஷம் எம்பியா இருந்து 48 ஆயிரம் கோடி கன்னியாகுமரிக்கு கொண்டு வந்தா பணத்தையும் பயன்படுத்த மாட்டீங்க. கொண்டு வந்த பணத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி  சகோதர சகோதரிகளே… திமுகவை என்னன்னு சொல்றது நீங்களே சொல்லுங்க. பாரதிய ஜனதா கட்சி தொண்டன் மீது கை வைத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். அது நடக்க வேண்டாம் என்று கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

முதல் குடும்பம் திமுகவினுடைய முதல் குடும்பம் அவர்கள் நடத்துகின்ற ஸ்ப்ரிங் மினரல் வாட்டர நமக்கு தள்ள வேண்டும் என்பதற்காக தான் ஆவின் குடிநீர் சேவையை ஆரம்பிப்பதற்காக கிளம்பி இருக்கிறார். உடனே முதலமைச்சர் சொல்லுவார். எங்கப்பன் குதிரைக்குள்ள இல்ல என்று முதலமைச்சர் அடிக்கடி சொல்லுவார். அதாவது ஆட்சி அதிகாரத்திலே என்னுடைய குடும்பம் இல்லை என்று முதலமைச்சர் சொல்லுவார்.

முதலமைச்சர் உடைய மருமகன் வேகமாக காலையில ஓடுறார். எங்க போற நீனு கேட்டா ? அமைச்சர பாக்க போறோம் என விமர்சனம் செய்தார். ( என செங்கலை உயர்திக் காட்டினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கொண்டுவந்த  எய்ம்ஸ் என உதயநிதி ஸ்டாலின் கையில் ஒன்றை செங்கலை காட்டி பிரச்சாரம் செய்த போது இருந்த ஆரவாரம் அண்ணாமலை பொதுக்கூட்டத்திலும் இருந்தது.