வேலூர்-காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே கள்ளுகடை சந்து பகுதியில் நாராயணசாமி என்பவர் மரக்கடை ஒன்று வைத்துள்ளார். இங்கு ஜன்னல், கதவு போன்ற மரப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடையில் ஏராளமான மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று காலையில் இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், கடை முழுவதும் தீ பரவியது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டு, ஆனால் அங்கிருந்த பல லட்சம் மதிப்பிலான மரப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்து மின்கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.