தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்தேவரகொண்டா. இவர் தற்போது வாலிபால் அணிக்கு இணை ஓனர் ஆகியுள்ளார். பிரைம் வாலிபால் லீக் என தனியார் அமைப்பு ஒன்று இந்திய மாநகரங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் சென்னை, கொச்சி, கோழிக்கோடு, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதபாத், கொல்கத்தா போன்ற 8 அணிகள் பங்கேற்கவுள்ளது. இதில் ஐதராபாத் அணியான “த பிளாக் ஹாக்ஸ்” அணியின் இணை ஓனராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் விஜய்தேவரகொண்டா பொறுப்பேற்றுள்ளார்.

இந்த அணியின் முதன்மையான ஓனராக அபிஷேக் ரெட்டி கன்கனலா உள்ளார். ஏற்கனவே விஜய்தேவரகொண்டா “கிங் ஆப் த ஹில் என்டர்டெயின்மென்ட்” எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு ஆஹா ஓடிடி தளத்தில் சிறிய பார்ட்னராக இருக்கிறார். மேலும் ரவுடிவேர் எனும் பேஷன் கம்பெனிக்கும் சொந்தக்காரராக உள்ளார். தற்போது புதியதாக விளையாட்டுத்துறையிலும் கால் பதித்துள்ளார் விஜய்தேவரகொண்டா.

.