இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுலும், ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் மற்றும் நடிகையான அதியாவும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். முன்னதாக வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த வருடம் தாங்கள் காதலிப்பதை உறுதிசெய்தனர்.

இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கும், அதியாவுக்கும் நேற்று திருமணம் முடிந்துள்ளது. மராட்டியத்திலுள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் வைத்து அவர்களது திருமணம் நடந்தது. மணமக்களின் இருவீட்டார் மட்டும் இத்திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். தற்போது புதுமண தம்பதியினருக்கு பல தரப்பினரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.