தமிழ் திரையுலகில் நடிகராகவும், எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ். இவர் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் உட்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார். அதோடு பல படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் ஈ.ராமதாஸ் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக இறந்தார். அவரது உடல் கேகே நகர் முனுசாமி சாலையிலுள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன்பின் மாலை 5 மணியளவில் நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.