காமெடி நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு பாரீஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற திரைப்படங்கள் வெளியாகியது. அதேபோல் சென்ற ஆண்டு குளுகுளு, ஏஜெண்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள் வெளிவந்தது. இந்நிலையில் சந்தானம் புது படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க தயாராகி இருக்கிறார்.

இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். முன்னதாக இவர்களது கூட்டணியில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்போது புது படத்தில் மீண்டுமாக இணைந்து உள்ளனர். அந்த புது திரைப்படத்துக்கு “வடக்குப்பட்டி ராமசாமி” என பெயர் வைத்துள்ளனர். இதில் வடக்குப்பட்டி ராமசாமி என்பது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்த கதாபாத்திரங்களில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.