திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக. ஸ்டாலின், இந்த மன விழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்று, மன விழாவை நடத்தி வைத்த  அதே நேரத்தில் மன மக்களை வாழ்த்த கூடிய  சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்,  பெருமைப்படுகிறேன். இன்று நடைபெற்று இருக்கக்கூடிய திருமணம்….  சீர்திருத்த திருமணமாக… சுயமரிதை உணர்வோடு நடைபெற்று இருக்கக்கூடிய திருமணமாக  நடந்தேறி  இருக்கிறது….  இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் நடைபெறும் நேரத்தில்…

குறிப்பாக நான் வாழ்த்துகிற நேரத்தில்…. ஒன்றை தவறாமல்… மறக்காமல்… வழக்கமாக…. வாடிக்கையாக… வரலாற்றில் பதிவாகி இருக்கக்கூடிய இரு செய்தியை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். என்ன அந்த செய்தி என்று கேட்டால் ? இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கவில்லை.

சட்டம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆக அந்த நிலையை  மாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 1967-இல் ஆட்சி பொறுப்பேற்று… ஆட்சியின் தலைவனாக…. தமிழ்நாடு முதல்வராக…. சட்டமன்றத்திற்குள்  முதன் முதலாக நுழைந்து….. சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும்,  சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற அங்கீகாரத்தை அன்றைக்கு அண்ணா பெற்று தந்தார். ஆகவே இன்றைக்கு நடைபெற்றிருக்க கூடிய இந்த திருமணம் சட்டப்படி… முறைப்படி… செல்லுபடி ஆகும் என்று அங்கீகாரத்தோடு நடந்திருக்கிறது. இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணம்  மட்டுமல்ல… இது  ஒரு தமிழ் திருமணம்….

இன்னும் பெருமையோடு சொல்லணும் என்றால் ?  நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கின்ற அங்கீகாரத்தை பெற்று தந்த தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். எனவே அந்த அங்கீகாரத்தோடு இது ஒரு தமிழ் திருமணமாக நடந்திருக்கிறது. அதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஆக அப்படிப்பட்ட அந்த திருமணத்திலே நாம் எல்லாம் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு…. மன மக்களை தமிழ் உணர்வோடு வாழ்த்திக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.