தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது வரை விரல் ரேகை பதிவு மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரல் ரேகை பதிவாகாததால் அதனை சாதகமாக பயன்படுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் குளறுபடியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் கைரேகைக்கு பதில் கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீதம் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அடுத்த ஒன்பது மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.