அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த போரில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கும் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா, உக்ரைன் நாட்டிற்கு 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்பில் புதிதாக ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், வெடி மருந்துகள் கவச வாகனங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், 50 ப்ராட்லி காலாட்படை சண்டை வாகனங்கள் போன்றவை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.