UPSC சார்பில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நடத்தப்பட்ட combined defence services அல்லது CDS 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 6518 பேர் அடுத்த சுற்ற நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் பி டி எஃப் இல் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்கள் இடம் பெற்றுள்ளது. இதனை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். தேர்ச்சி பெறாதவர்களின் மதிப்பெண் பட்டியல் 15 நாட்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.