மருத்துவ அதிகாரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய தலைநகர் பிரதேசம் டெல்லி அரசாங்கத்தின் 234 பதவிகளுக்கான தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு மாலை இரண்டு மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ள நிலையில் medical science இல் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமை தொழிலாளர் ஆணையம் அலுவலகத்தில் தொழிலாளர் அமலாக்க அதிகாரி பதவிக்கு 42 பணியிடங்கள் உள்ளது.

மத்திய தொழிலாளர் சேவையில் Assistant Labour Commissioner ,  Assistant Welfare Commissioner, Assistant Labour Welfare Commissioner,  Assistant Director பதவிக்கு 29 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வானது வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு அட்டவணையை தேர்வர்கள் upsc.gov.in  என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.