உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் கியோலாரி என்ற கிராமத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்த நிலையில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் உள்ளூரில் உள்ள வேட்டைக்காரரிடம் சென்று காட்டி மருந்து கொடுத்துள்ளனர். அதன் பிறகு வெறிநாய் கடித்ததால் ஏற்பட்ட அறிகுறிகளை குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் சில நாட்களில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

அது மட்டுமல்லாமல் சிறுமி தன்னை சுற்றி உள்ளவர்களை கடித்தும் நகங்களால் கீறியும் உள்ளார். சிறுமியை கடித்த அந்த நாய் இறந்துவிட்ட நிலையில் ரேபிஸ் நோய் பரவும் அச்சமும் அதிகரித்தது. என் நிலையில் கடந்த வாரம் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் சிறுமியால் கடிக்கப்பட்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். தங்களுக்கு ரேபிஸ் நோய் பரவிவிடும் என்ற பயத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தெரு நாயால் கடிக்கப்பட்ட சிறுமி இறப்பதற்கு முன்பு 40 பேரை கடித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது