சிக்கிம் மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு ஆண்டு முழுவதும் மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்துள்ளது. பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பை 1 வருடத்திற்கு நீட்டித்ததுடன், ஆண்களுக்கும் 1 மாதம் விடுப்பு வழங்கவுள்ளதாக சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தினால் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள முடியும் என்று முதல்வர் கூறினார். தமிழ்நாட்டில் ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் பெண் ஊழியர்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.