திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்ற ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு திட்டம் சில பள்ளிகளில் ட்ரயல் மாதிரி ஆரம்பிச்சோம். நான் ஒவ்வொரு மாவட்டம் போகும்போது போய் அந்த மாணவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டு, உணவோட தரம், அட்டனன்ஸ் ரிஜிஸ்டர் இதெல்லாம் ஆய்வு செஞ்சுதான் இந்த திட்டம் மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்று இருக்கு.

கிட்டத்தட்ட 30 லிருந்து 40% மாணவர்கள் அதிகமா வராங்க பள்ளிக்கூடத்துக்கு இந்த திட்டத்தினால. இந்த திட்டம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்கிற ஒரே நோக்கத்தோட உருவாக்கப்பட்டது.  இன்னும் சொல்லப்போனால் ? திமுகவுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத திட்டம்.அதுக்கப்புறம் தலைவர் வந்து முடிவெடுத்தாங்க. இது நல்ல வரவேற்பு இருக்கு பெற்றோர்கள் மத்தியில.. மாணவர்கள் மத்தியில…

பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் நிறைய பேர் வருவாங்க என்ற ஒரு நோக்கத்தோடு 17 லட்சம் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 31,000 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு,  மாணவர்கள் பெற்றோர்கள் எல்லாம் வாழ்த்துறாங்க… முதலமைச்சர வாழ்த்துறாங்க… இந்த அரச வாழ்த்துறாங்க.

காலை சிற்றுண்டி திட்டத்தால் அனைவரும் அரசை வாழ்த்துறாங்க. பெற்றோர்களெல்லாம் முதல்ல வந்து கொஞ்சம் கவலையா இருந்தாங்க. இப்ப வந்து தன்னுடைய குழந்தைகளை பாத்துக்குறதுக்கு நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார்.

இந்த அரசு இருக்கு அப்படின்னு நல்ல வாழ்த்துறாங்க. இதர பார்த்து வன்மத்தோடு…  கெட்ட வார்த்தை அதைவிட ஒரு அசிங்கமான வார்த்தை… எனக்கு சொல்ல தெரியல…  ஒரு பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டாங்க….  அதற்கு தமிழ்நாடு முழுக்க இருந்து எப்படி எதிர்ப்பு வருதுன்னு உங்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.