தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அன்று தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு கோடி 6 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ள நிலையில் இதற்கான உரிய விளக்கத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் மொபைலில் எஸ்எம்எஸ் மூலம் காரணம் தெரிவிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் மின் பயன்பாடு, அரசு பணி, சொந்த கார் மற்றும் டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் மற்றும் ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டம் குடும்ப தலைவிகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.