ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அவர்களின் சாதனத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் தங்களது சாதனம் ஏதேனும் மோசமான தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இதனிடையே ஆபத்து விளைவிக்கும் மென் பொருளின் பெயர் “Fleckpe” ஆகும்.  இது 600000 பயனாளர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்ட பல கூகுள் செயலிகளில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்துவதால் நிதி இழப்பு பிரச்சனையை சந்திக்கும் அபாயம் இருக்கிறது. அதே நேரம் இந்த ஆபத்தான மென் பொருளில் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருக்கின்றனர். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ள அந்த ஆபத்தான செயலிகளின் பட்டியலை தற்போது காண்போம்.

# Impressionism Pro Camera

# GIF Camera Editor Pro

# HD 4K Wallpaper

# Fingertip Graffiti

# Microclip Video Editor

# Beauty Camera Plus

# Beauty Photo Camera

# Beauty Slimming Photo Editor

# Photo Camera Editor

# Photo Effect Editor

#  Night Mode Camera Pro

# FIGHTING ANDROID MALW

மேற்கண்ட செயலிகள் உங்களது மொபைலில் டவுன்லோடு செய்யப்பட்டு இருப்பின் அதை நீங்கள் உடனே மொபைலிலிருந்து டெலிட் செய்துவிடுங்கள்.