இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் அரசும் இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து முக்கிய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் whatsapp பயனர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. இது சைபர் குற்றவாளிகளின் நடவடிக்கை என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

வெளிநாட்டு குறியீடுகள் கொண்ட அழைப்புகள் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர். சமீபத்தில் வாட்ஸ் அப் பயனர்களுக்கு வெளிநாட்டு குறியீடுகளுடன் மீண்டும் மீண்டும் அழைப்புகள் வருவதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் யாரும் அதனை எடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.