இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருந்த போது ஆங்கில அரசை வீழ்த்த இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வந்தார். இதனிடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறப்பின் மர்மம் இன்று வரையிலும் விலகவில்லை. இந்த வரலாற்று நிகழ்வை பின்னணியாக வைத்து “ஸ்பை” எனும் படம் தெலுங்கில் தயாராகிறது.

இப்படத்தை பிரபல தெலுங்கு எடிட்டர் பி.எச்.கேரி இயக்குகிறார். ஈடி என்டர்டெயின் மெண்ட் சார்பாக கே.ராஜசேகர ரெட்டி, சரந்தேஜ் உப்பளதி இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் நிகில் சித்தார்த்தா, ஐஸ்வர்யா மேனன், சான்யா தாக்கூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ்பாண்டே, ஜிசு ஜென் குப்தா, நிதின் மேத்தா, ரவிவர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கில் தயாரானாலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வரும் ஜூன் 29-ம் தேதி ரிலீஸ் ஆகும்.